தலைப்புச் செய்திகள்

பொதுத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் நிராகரிப்பு

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5.65 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதாவது 667,240 வாக்குள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இம்முறை 17,140,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். ஆயினும் 11,815,246 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். அதாவது 68.93 வீதமானோர் மட்டுமே பொதுத் தேர்தலில் வாக்களித்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 17,140,354 வாக்காளர்களில் 13,319,616 பேர் (79.46 வீதம்) வாக்களித்திருந்தனர். அதில் 300,300 (2.2%) வாக்குகளே நிராகரிக்கப்பட்டன.

அந்த வகையில், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.