கடத்தல் குற்றத்தை, தண்டனை சட்டத்தில் உள்ளடக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

🕔 February 13, 2016

Hakeem -754டத்­தப்­பட்­ட­வர்கள் தொடர்­பான குற்­றத்தை தண்­டனைச் சட்­டத்தில் கொண்டு வந்து, அந்தக் குற்றத்துக்கு தண்­டனை வழங்கப்­பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும், அமைச்­ச­ரு­மான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரி­வித்தார்.

வடக்கு, கிழக்கில் காணா­மல் போனோருக்கு மரணச் சான்­றி­தழ்கள் வழங்­கு­வது தொடர்­பாக, சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்­திக பத்­தி­ரண முன்­வைத்த தனி­நபர் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லயே அமைச்சர்ஹக்கீம் இவ்­வாறு கூறினார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

காணாமல் போன­வர்கள் என்ற விட­யத்தில் தமி­ழர்கள் அதி­க­ளவு பாதிக்­கப்­பட்­ட­னர். முஸ்லிம்களும் இதனால் பாதிப்­பு­களை சந்­தித்­தார்கள். காணாமல் போன­வர்­களில் சிங்­களச் சமூகமும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. காணாமல் போன­வர்கள் என்ற சான்­றிதழ் வழங்கும் விட­யத்தில் ஐ.நா. சட்டங்கள் கடை­பி­டிக்­கப்­பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாண உறுப்­பினர் ஒருவர் காணாமல் போனார். ஆனால் அவ­ருக்கு என்ன நடந்தது என்று இன்வரை தெரி­யாது. இந் நிலையில் அவ­ரின் தாயார் இன்­னமும் அவர் உயி­ரோடு இருக்­கின்றார் என்ற நம்­பிக்­கை­யு­ட­னேயே வாழ்ந்து வரு­கின்றார்.

எனவே, பல­வந்­த­மான கடத்தல் தொடர்­பான குற்­றத்தை, எமது தண்­டனை மட்­டத்தில் கொண்டு வரவேண்டும். அத்­தோடு பர­ண­கம ஆணைக்­குழு உட்பட பல ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளுக்கமைய, கடத்தலை தண்டனைக்குறிய குற்றமாக்கி தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்