தலைப்புச் செய்திகள்

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னியின் ஹீப்ரு மொழி X கணக்கு, திறக்கப்பட்ட மறுநாள் இடைநிறுத்தம்

ரானிய உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெனி – சமூக ஊடக X தளத்தில் திறந்த ஹீப்ரு மொழி கணக்கு, திறக்கப்பட்ட மறுநாள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அவரது @Khamenei_Heb கணக்கில் X இன் விதிகளை மீறியமைககாக இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சியோனிச ஆட்சி தவறு செய்தது. ஈரான் மீதான அதன் கணக்கீடுகளில் அது தவறிவிட்டது. ஈரானிய தேசத்திற்கு என்ன வகையான வலிமை, திறன், முன்முயற்சி மற்றும் திறன் உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்வோம்’ என, அவர் கணக்கில் பதிவு செய்யப்பட்டமையை அடுத்து, இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னர் ட்விட்டர் என அழைக்கப்பட்ட X இல் உள்ள விதிகள், ‘வன்முறை மற்றும் வெறுக்கத்தக்க நிறுவனங்களின்’ உள்ளடக்கத்தைத் தடைசெய்கின்றன, ஆனால் இநத விதிமுறைகள் “அரசு அல்லது அரச நிறுவனங்களின்” பதிவுகளுக்கு விதிவிலக்கு அளிக்கின்றன.

இந்த தடை குறித்து X தளம் – உடனடி கருத்து எதையும் வெளியிடவில்லை.