
வற் வரியை செலுத்தாமல் இழுத்தடித்தமைக்காக 06 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட டப்ளியு.எம். மென்டிஸ் கம்பனி பணிப்பாளர் அர்ஜுன் அலோசியல் தரப்பில் விடுக்கப்பட்ட பிணை மனுக் கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.
350 கோடி ரூபாவை வற் வரியாக செலுத்தத் தவறியமைக்காக டப்ளியு.எம். மென்டிஸ் கம்பனி பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் இருவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியது.
வற் வரியாக 350 கோடி ரூபாயை உரிய காலத்தினுள் செலுத்தத் தவறியமைக்காகவே, இந்தத் தண்டனை விதித்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவர்கள் குறித்த தொகையை செலுத்தியே ஆக வேண்டும்.



