தலைப்புச் செய்திகள்

88 வருடங்களின் பின்னர் தேர்தல் அரசியலில் போட்டியிடாத ராஜபக்ஷக்கள்

ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து 88 வருடங்களின் பின்னர் இம்முறை தேர்தல் அரசியலில் யாரும் போட்டியிடவில்லை என்பது, அரசியல் பரப்பில் முக்கிய விடயமாகும்.

டி.எம். ராஜபக்ஷ 1936ஆம் ஆண்டு அரச சட்டவாக்க சபை (State Council of Ceylon) தேர்தலுக்கான வேட்பாளராக ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் தேர்தல் அரசியலை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் டி.ஏ. ராஜபக்ஷ, லக்ஷ்மன் ராஜபக்ஷ, ஜோர்ஜ் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, நிருபமா ராஜபக்ஷ, ஷியாம்லால் ராஜபக்ஷ ஆகிய ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்கினார்.

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இம்முறை புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்டாலும் – அவர் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.