தலைப்புச் செய்திகள்

வர்த்தகரின் வாகனத்தை அரசுடமையாக்குமாறு உத்தரவு

துளை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் ஜீப் வாகனமொன்றை, அரசுடமையாக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சொகுசு வானத்தை லஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியிருந்தது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுமுன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து, அரசுக்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதுளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்த Mitsubishi Montero ஜீப் வாகனத்தையே அரசுடமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.