
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத் தேர்தலுக்கான தேசிய பட்டியலில், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்சியின் தேசியப்பட்டியலில் சிரேஷ்ட முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே, சி.பி ரத்நாயக்க மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோரின் பெயர்களும் உள்ளன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி மற்றும் பிரபல நடிகை அனுஷா தமயந்தி ஆகியோரும் தேசியப் பட்டியல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அந்தக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தேர்தலில் போட்டியிடவுமில்லை என்பதோடு – தேசியப் பட்டியலிலும் அவரின் பெயர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



