
பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து, மொத்தம் 764 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
ஆயினும், அவற்றில் 690 வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததையடுத்து இன்று (11) மாலை செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்; திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் அதிகளவான வேட்பு மனுக்கள் 72 பெறப்பட்டுள்ளதாக கூறினார்.
இதில் 08 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் 64 ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
பொலன்நறுவை மற்றும் மொனராகல மாவட்டங்களில் தலா 15 வேட்புமனுக்கள் கிடைத்தன என்றும், இவையே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேட்புமனுக்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வேட்பாளர்களுக்கான விருப்பு எண்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 04ஆம் திகதி தொடங்கி இன்று (ஒக்டோபர் 11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.



