கட்சித் தலைத்துவத்தை விரும்பி ஒப்படைக்கவில்லை; மஹிந்த தெரிவிப்பு

🕔 February 11, 2016
Mahinda Rajapaksa - 0987ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தினை, தான் விரும்பி ஒப்படைக்கவில்லை என்றும், நிறைவேற்று சபை உறுப்பினர்கள் சிலரின் கோரிக்கைக்கு இணங்கவே கட்சித் தலைமைத்துவத்தினை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேராவின் வீட்டில் நடைபெற்ற, உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது மஹிந்த இதனை கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது கைச்சின்னமும், டாலி வீதியில் இருக்கும் கட்டிடமும் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது மக்கள்தான். நான் அந்த இடத்திலேயே இருக்கிறேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை, ஏன் ஒப்படைத்தீர்கள் என சிலர் கேட்கின்றனர்.

உண்மையில் நான் கொடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் நான் தோல்வியடைந்த பின்னர், பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை கூட்டப்பட்டது.

கூட்டம் ஆரம்பிக்கும் போது 30 பேர் இருந்தனர். இறுதியில் 15 முதல் 20 பேரே அங்கு இருந்தனர்.

அங்கிருந்தவர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைய தீர்மானித்தனர். அன்று நிறைவேற்றுச் சபைக்  கூட்டம் முடியும் போது, எஞ்சியிருந்தவர்கள் கட்சியினரை பாதுகாக்க, கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்குமாறு கூறினர்.

அதனடிப்படையிலேயே கட்சியின் தலைமைத்துவத்தை அவரிடம் நான் ஒப்படைத்தேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்