
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கத் தீர்மானித்தமை தொடர்பில் தனக்குத் தெரியாது என்று, அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (01) வவுனியாவில் இடம்பெற்ற போது, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென அந்தக் கட்சி தீர்மானித்தது.
ஆனாலும், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இன்றைய கூட்டத்தில் சுகவீனம் காரணமாக கலந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.
அதேவேளை, இந்தத் தீர்மானம் தொடர்பில் தன்னுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும், தீர்மானம் பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்தி: தமிழரசுக் கட்சி – சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: சுமந்திரன் அறிவிப்பு



