தலைப்புச் செய்திகள்

தெரண உரிமையாளர் திலித் ஜயவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டோர் இணைந்து புதிய அரசியல் கூட்டணி ஆரம்பம்

தெரண ஊடக வலையமைப்பின் உரிமையாளரும் மௌபிம ஜனதா கட்சி தலைவருமான திலித் ஜயவீர உட்பட பல அரசியல் கட்சிகள் இணைந்து ‘சர்வஜன பலய’ என்ற புதிய அரசியல் கூட்டணியை இன்று (27) காலை கொழும்பில் தொடங்குவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, தெரண உரிமையாளர் திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்ட தரப்புகள் இணைந்து ‘சர்வஜன பலய’ என்ற புதிய அரசியல் கூட்டணியை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆர்வத்தை – தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர வெளியிட்டு வரும் நிலையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.