
ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ரொபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகரிலிருந்து 180 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஹன்ட்லோவா நகரில் – கலாசார சமூக மையத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், பிரதமர் அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது, அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், ஹெலிகொப்டர் மூலம் பிரதமர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.



