‘அடித்து நொறுக்குங்க, அமைதி பெறுங்க’: மன இறுக்கத்திலிருந்து விடுபடும் நவீன முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

🕔 March 17, 2023

‘ஆத்திர அறை’ (Rage Room) குறித்த செய்தியை – நாம் இன்று வெளிட்டிருந்தோம். ஆனால், அதற்கு 10 நாட்கள் முன்பாகவே ‘ஆத்திர அறை’ குறித்து தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி – தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு பதிவொன்றை இட்டிருந்தார். ‘ஆத்திர அறை’ குறித்த மேலதிக தேடல் உள்ளவர்களுக்காக, அதனை நாம் இங்கு வழங்குகின்றோம்

அது என்ன Rage Room ?

நீங்கள் கடும் கோபத்திலோ, மன இறுக்கத்திலோ இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அல்லது அன்றாட வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து கொஞ்ச நேரம் விலகியிருக்க விரும்புகிறீர்கள். அல்லது உங்கள் மன அழுத்தத்தை வெளியிட பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துவதில் சோர்வடைந்த நிலையில் உள்ளீர்கள் என வைத்துக்கோள்வோம். இவை அனைத்துக்கும் தீர்வினை வழங்கும் ஒரு வித்தியாசமான முறையே ஆத்திர அறை (rage room.

உங்களுக்கு விருப்பமான இசை அல்லது பாடலை கேட்டபடி ஒரு மூடிய அறைக்குள் அடுக்கப்பட்டிருக்கும் கண்ணாடிகள் போன்ற உடைக்கக்கூடிய பொருட்கள், பழுதடைந்த தளபாடங்கள், கற்கள், பழைய இலத்திரனியல் பொருட்கள் என்று அத்தனையையும் பாதுகாப்பான முறையில் ஆத்திரம் தீரும்வரை அடித்து நொறுக்கும் செயற்பாடே தற்போதைய நவீன stress relief method (மன இறுக்கத்திலிருந்து விடுபடும் முறை) என்று இனங்காணப்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் இத்தகைய சேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளன.

கட்டணம் எப்படி ?

இலங்கையில் 2000 ரூபாவிலிருந்து இந்த சேவைகள் கிடைக்கின்றன. இந்தியா – பெங்களூரில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய நிறுவனமொனறு Solo/Double என்று இரண்டு வகையினைஅறிமுகம் செய்துள்ளது.

இங்கு அடித்து, உடைக்கும் நேரத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கிறது (இந்திய ரூபா 299 முதல் 3599 ரூபா வரை).

எப்படி உருவானது ?

2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் – மக்கள் தங்கள் கோபத்தை பாதுகாப்பாக வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக ஜப்பானில் இருந்து Rage Room எனும் கருத்து முதலில் எழுந்தது. ஆரம்பத்தில் ‘சுசுஜி கருதா’ அல்லது ‘ஆடை கிழித்தல்’ என்று இது அழைக்கப்பட்டது.

இது வன்முறையை நாடாமல் உணர்ச்சிகளை வெளியிட மக்களை அனுமதித்தது. இந்த யோசனை விரைவாக ஜப்பானில் இருந்து ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

இறுதியில் 2004 க்குள் ஐரோப்பாவை அடைந்தது. 2008ஆம் ஆண்டில் ஆசியாவுக்கு வெளியே Rage Room களைத் திறந்த முதல் நாடுகளில் ஒன்றாக போலந்து பதிவானது. இந்த அறைகளை ‘ரேஜ் ஸ்டுடியோஸ்’ என்று போலந்து அழைத்தது.

அதன்பிறகு, 2010ஆம் ஆண்டில் ஐரோப்பா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் இந்த அறைகள் திறக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டளவில், டொராண்டோவில் Rage Room தொடங்கப்பட்டதன் மூலம் கனடா தனது கதவுகளைத் திறந்தது.

இலங்கையில் Rage Room ?

இலங்கையில் Rage Academy என்ற பெயரில் இலங்கையின் முதலாவது Rage Room பத்தரமுல்ல வில் இயங்கி வருகிறது. இந்த நிறுவன தலைவரான ஷவீன், அவரின் காதலி – தங்களுக்குள் சண்டையிடாமல் கோபத்தை வித்தியாசமாக வெளிப்படுத்த Rage Academy யை ஆரம்பித்தார்களாம்.

தொடர்பான செய்தி: இலங்கையின் முதலாவது ‘ஆத்திர அறை’ பத்தரமுல்லையில்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்