போதைப் பொருள் தொடர்பான சட்டங்களை சில பொலிஸ் நிலையங்கள் மீறுகின்றன: நீதியமைச்சர் குற்றச்சாட்டு

🕔 March 17, 2023

போதைப்பொருள் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை சில பொலிஸ் நிலையங்கள் மீறுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் – சில பொலிஸ் நிலையங்களில் பொய்யாகப் பதியப்படுவதாக அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் நிரூபித்துள்ளதாகவும் ஊடகங்களிடம் அமைச்சர் கூறியுள்ளார்.

“போதைப்பொருளாகக் கருதப்படும் பொருட்களுடன் மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இருப்பினும், அவை பனடோல் தூளாகவும் இருக்கலாம். அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கை பல மாதங்களுக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் போதே, அந்தப் பொருள் சட்டவிரோதமான மருந்து அல்ல என்று தெரிவிக்கப்படுகிறது. இது நியாயமற்ற நிலை” எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பழிவாங்கும் நோக்கில் சிலருக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை பொலிஸார் தவறாகப் பதிவு செய்ததாக பொதுமக்களால் பல முறைப்பாடுகள் உள்ளன என்றும் – நீதி அமைச்சர் சுட்டிக்காட்டடினார்.

இது தொடர்பாக அடுத்த சில வாரங்களுக்குள் விசாரணை நடத்த நீதி அமைச்சு எதிர்பார்ப்பதாகத் கூறியுள்ள அமைச்சர், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கவும், தவறாகக் காவலில் வைக்கப்பட்டவர்களுக்கு உதவவும் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்