மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி

🕔 March 14, 2023

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தில் 2016 ஆம் ஆண்டு இலங்கை கையெழுத்திட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேற்படி பிரகடனத்தின் 04 வது பிரிவின்படி, ஊனமுற்ற நபர்களுக்கான அனைத்து மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களையும் எந்தவிதமான பாகுபாடுமின்றி முழுமையாக உணர்ந்துகொள்வதை உறுதிசெய்து மேம்படுத்துவதை உறுதிசெய்துள்ளது.

இது தொடர்பான பூர்வாங்க வரைவை தயாரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1996ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கி, புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதற்கு பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் எனும் வகைியல் ஜனாதிபதியும், நீதியமைச்சரும் இணைந்து முன்வைத்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவினால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க வரைவு சட்டமூலத்தின் அடிப்படையில் – புதிய சட்டத்தை உருவாக்கும் பொருட்டு, சட்ட வரைவாளர்களை வழிநடத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்