தலைப்புச் செய்திகள்

நீர் விரயம் அதிகமுள்ள இடங்கள் குறித்து தகவல் வெளியீடு

நீர் விரயமாகும் பிரதான இடமாக பாடசாலை வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதனையடுத்து நீர் விரயம் ஏற்படும் இடங்களாக அரச அலுவலகங்கள் மற்றும் மத ஸ்தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு இலவசமாக நீர் விநியோகம் செய்யப்படுவதனால் நீர் விரயம் அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பல இடங்களில் நீர் விரயமாகுவதனால், ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் இழப்பு ஏற்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.