எரிபொருட்களின் விலைகள், இன்று நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன

🕔 January 2, 2023

ரிபொருட்கள் சிலவற்றின் விலைகளை இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

420 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் இன்று நள்ளிரவு முதல் 405 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேபோல், 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் மண்ணெண்ணெய், இன்று நள்ளிரவு முதல் 355 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்