பொலிஸ் உப பரிசோதகராக அட்டாளைச்சேனை ஆப்தீன் பதவி உயர்ந்தார்

🕔 January 2, 2023

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனையைச் சேர்ந்த உதுமாலெப்பை ஸெய்னுல் ஆப்தீன் – பொலிஸ் உப பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இவருக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டு கொன்டபிளாக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இவர், பதவி உயர்வுக்கு முன்னர் பொலிஸ் சார்ஜனாக பணியாற்றினார்.

இவர் தற்போது பொலிஸ் விசேட பிரிவில் (Police Special Branch) கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் 08 வருடங்களும், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 03 வருடங்களும் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தராக இவர் கடமையாற்றியுள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இவர் பணியாற்றிய காலங்களில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்