இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம்: அட்டாளைச்சேனையில் கலந்துரையாடல்

🕔 January 1, 2023

– நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் –

‘இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம் சமூகத்தின் வகிபாகம்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று, நேற்று (31) இரவு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

சமூக நடவடிக்கைகள், துறைசார் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான மையம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

மேற்படி ஆராய்ச்சி மையமினுடைய தலைவர் அதிபர் எம்.ஜே.எம் அன்வர் நௌசாத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் அரசியல் விஞ்ஞான துறைத்தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ. சதாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

வை.எம்.எம்.ஏ அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் நிகழ்வை ஆரம்பித்து உரையாற்றினார்.

இனமுரண்பாடுகளில் முஸ்லிம் தலைவர்கள் நடந்து கொண்ட விதங்கள், கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் தவறவிட்ட சந்தர்ப்பங்கள், முஸ்லிம் அரசியலின் போக்குகள், அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளில் சமூகம் அடைந்த லாப நட்டங்கள், இன ஒற்றுமை, சமஷ்டி, அரசியல் தீர்வில் முஸ்லிங்கள் எதிர்பார்ப்பது போன்ற பல விடயங்கள் இதன்போது பேசப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், கிழக்கின் கேடயம் பிரதானியும், அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ், அல் – மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், என்.டி.பி.எச்.ஆர். இந் தேசிய கொள்கைப்பரப்பு செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், நாம் ஊடகர் பேரவையின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல். மப்றூக் ஆகியோர் இங்கு கருத்துரையாற்றினர்.

இதன்போது மூத்த சட்டத்தரணி எஸ்.எம்.ஏ கபூர் மற்றும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல். வாஹிட் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்