
ஐஸ் மற்றும் சில வகை போதைப்பொருள்கள் கம்பஹாவில் உள்ள பாடசாலை சிற்றுண்டிசாலை ஒன்றில் இன்று (05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
42 வயதுடைய பெண் ஒருவரே ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண் பாடசாலையில் உள்ள சிற்றுண்டிசாலையை (கேன்ரின்) நிர்வகிப்பதாகக் கூறப்படுகிறது.
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள மேற்படி பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து 7 ஐஸ் பொதிகளும் 38 மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐஸ் எனப்படும் (மெத்தம்பேட்டமைன்) போதைப்பொருள் உள்ளிட்ட சில போதைப்பொருள்கள் பாடசாலைகளுக்குள் கடத்தப்படுவதாக அண்மைக்காலமாக கூறப்பட்டு வந்தது.
இந்தப் பாடசாலை மாணவர்களின் கைகளுக்கு போதைப்பொருள் கிடைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.



