அமெரிகெயாஸ் நிறுவனத்திடமிருந்து இலங்கைக்கு 28 கோடி ரூபா பெறுமதியான மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு

🕔 September 22, 2022

லங்கை மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் மருத்துவப் பொருட்களை, அமெரிகெயாஸ் (Americares) வழங்கியுள்ளது. நன்கொடை மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதில் உலகின் முன்னணி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் இது ஒன்றாகும்.

இவ்வாறு வழங்கப்பட்ட மருத்துவப் பொருள்களின் பெறுமதி 773,000 அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் சுமார் 28 கோடி ரூபா) பெறுமதியானதாகும்.

இந்த நன்கொடையானது, மகப்பேறுக்கு முந்தையோர் மற்றும் பாலூட்டுவோருக்கான விட்டமின்கள், நாட்பட்ட நோய்க்கான மருந்துகள், ஊசியகள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களைக் கொண்டுள்ளது.

அமெரிக்கத் தூதுவர் மகிந்த சமரசிங்கவின் பணிப்புரையின் கீழ் வொஷிங்டன் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்கால நன்கொடைகள் நடைபெறுவதற்கு உதவும் வகையில் இலங்கை சுகாதார அமைச்சுக்கும் அமெரிகெயாஸ் (Americares) நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வைக் குறிக்கும் வகையில் வாஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் முறையான சான்றிதழ் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க மற்றும் அமெரிகெயாஸ் நிறுவன பிரதி மருத்துவ அதிகாரி சாதனா ராஜமூர்த்தி ஆகியோருடன் ஆவணங்களை இதன்போது பரிமாரிக் கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்