மலேசியாவில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு: அந்த நாட்டு அமைச்சர் அறிவிப்பு

🕔 September 21, 2022

லங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இலங்கையில் இருந்து 10,000 பேரை வேலைக்கு அமர்த்துவதற்கு மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் எம். சரவணன் இன்று அறிவித்தார்.

இந்த முடிவுக்கு பதிலளித்த வெளிநாட்டு வேலைவாய்பபு அமைச்சர் மனுஷ நாணயக்கார, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனுப்பப்பட்ட கடிதம் மூலம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பான தனது கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்டதற்காக மலேசிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திட மலேசியாவின் மனிதவள அமைச்சர் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.

மலேசியாவில் கைத்தொழில், உற்பத்தி, சுற்றுலா, விவசாயம் ஆகிய துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மலேசியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்தான பின்னர், கிடைக்கக்கூடிய வேலைகள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments