சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை: சபை முதல்வர் சுசில், நாடாளுமன்றில் தெரிவிப்பு

🕔 September 8, 2022

ர்வதேச நாணய நிதியத்துடன் (ஐஎம்எப்) எந்தவித ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை என்றும் சர்வதேச நாணய திதிய ஊழியர்களுடன் ஒரு புரிந்துணர்வு மட்டுமே எட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் இன்று (08) சபையில் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டமைக்கு பதிலளித்த சபைத் முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த; “சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரத்தின் பின்னர் ஒப்பந்தம் வெளியிடப்படும்” என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை முன்னைய சந்தர்ப்பங்களில் வெளியிடப்படவில்லை எனவும், அதுவே நடைமுறையில் உள்ளதாகவும் கூறிய அமைச்சர்; “சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரத்திற்குப் பின்னர் அது வெளியிடப்படும்” என்றார்.

இந்த ஒப்பந்தம் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழியர் மட்ட உடன்படிக்கையில் தீங்கு விளைவிக்கும் முன்மொழிவுகள் இல்லை என்றால், அது வெளியிடப்படாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து அரசாங்கத்தின் முதன்மைக் கணக்கை -4 இலிருந்து 2.5 ஆக அதிகரிப்பது, அரச வருவாயை 15% ஆக அதிகரிப்பது போன்ற பல முன்மொழிவுகளை உள்ளடக்கிய நான்கு வருடங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் நீட்டிக்கப்பட்ட கடன் தொடர்பில் அரசாங்கம் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்