
மனித பாவனைக்கு தகுதியற்ற 5,670 கிலோ பழைய மீன்களை ஏற்றிச் சென்ற ஒருவரை நேற்று (31) நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் லொறியுடன் பொலிஸார் கைது செய்தனர்.
லொறியை பொலிஸார் சோதனையிட்ட போது, சிலாபத்தில் இருந்து நீர்கொழும்பு நோக்கி துர்நாற்றம் கொண்ட மீன்களை ஏற்றிச் சென்ற லொறி தோப்புவ பாலத்தில் வைத்து கைப்பற்றப்பட்டது.
3.4 மில்லியனுக்கும் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இந்த மீன்கள், மனித பாவனைக்கு தகுதியற்றதாக காணப்பட்டன.
லொறியின் சாரதி நீர்கொழும்பு, பிடிபனை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவராவார்.



