
இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அதிகரித்த வற் வரி (பெறுமதி சேர் வரி) இன்று (01)தொடக்கம் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வீதமாக இருந்த வற் வரியை 15 வீதமாக உயர்த்துவதாக இடைக்கால வரவு – செலவுத் திட்ட உரையின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்தார்.
வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட விடயமொன்று, அது தொடர்பான வாக்கெடுப்பு வெற்றி பெற்றதன் பின்னரே நடைமுறைக்கு வருவது வழமையாகும்.
ஆனால், வாக்கெடுப்புக்கு முன்னரேயே வற் வரி அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் 15 வீதமாக இருந்த வற் வரியை, கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் 08 வீதமாகக் குறைத்தார்.
இதனை ரணில் விக்ரமசிங்க பிரதமரான பின்னர் 12 வீதமாகவும், ஜனாதிபதியானதன் பிறகு 15 வீதமாகவும் மீண்டும் உயர்த்தியுள்ளார்.



