அட்டாளைச்சேனை நியாஸ் ஆதம்; சட்டத்தரணியானார்

🕔 August 13, 2022

ட்டாளைச்சேனை – கோணாவத்தையைச் சேர்ந்த ஆதம்லெவ்வை நியாஸ் சட்டத்தரணியாக பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தராக கடமையாற்றுி வரும் இவர், அட்டாளைச்சேனை அந் – நூர் மகா வித்தியாலயம் மற்றும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் (சமூகவியல்) விசேட பட்டத்தினையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தினையும் நியாஸ் பெற்றுள்ளார்.

கோணாவத்தை பிரதேசத்தில் பாலர் பாடசாலையினை நிறுவி மாணவர்களுக்கு ஆரம்ப கல்வியினை வழங்குவதில் இவர் முன்னின்று செயற்பட்டதோடு, மாணவர்களுக்கு பகுதி நேர வகுப்புக்களை நடத்தி சிறந்ததோர் கல்விச் சமூகத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

இவர் – அட்டாளைச்சேனை, கோணாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஆதம்லெவ்வை – கதீஜா உம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்