கோட்டாவுக்கு சிங்கப்பூர் வழங்கிய வீசா முடிகிறது: நாளை தாய்லாந்து செல்கிறார் என ரொய்ட்டர்ஸ் தகவல்

🕔 August 10, 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாளைய தினம் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து  செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை அடுத்து, கடந்த ஜூலை 14ஆம் திகதி மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்ற கோட்டா, அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரை விட்டு வெளியேறி நாளை வியாழன் தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு தகவல் வட்டாரங்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையை விட்டு வெளியேறியதில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுத் வெளியில் தோன்றவோ கருத்துக்களை தெரிவிக்கவோ இல்லை. மேலும், தாம் அவருக்கு எந்த சலுகைகளையும் விலக்குகளையும் வழங்கவில்லை என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாவுக்கு அவருக்கு நாளை வரை (ஓகஸ்ட் 11) குறுங்கால வீசா வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதி காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை 31 அன்று ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், “முன்னாள் ஜனாதிபதி கோட்டா திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை” என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்