அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு புதிய விலை: தவிசாளருடனான கலந்துரையாடலில் தீர்மானம்

🕔 August 7, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஒரு கிலோ மாட்டிறைச்சியை (தனி இறைச்சி) 1750 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபைத் தவிசாளருக்கும் மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த முடிவு எட்டப்பட்டதாக தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.

பிரதேச சபையில் இன்று (07) மாலை மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதேவேளை ஒரு கிலோகிராம்- எலும்பு கலந்த இறைச்சி (இறைச்சி 800 கிராம்+எலும்பு 200கிராம்) 1550 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இறைச்சிக் கடைக்காரர்கள் டிஜிட்டல் தராசியை பயன்படுத்த வேண்டும் என்றும் இதன் போது உத்தரவிடப்பட்டது.

புதிய விலைப்பட்டியலை ஒவ்வொரு கடையிலும் பிரதேச சபையே காட்சிப்படுத்தும் எனவும் தவிசாளர் கூறினார்.

இந்த நிபந்தனைகளை மீறும் இறைச்சிக் கடைகள் மூடப்படும் எனவும் தவிசாளர் அமானுல்லா மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனையில் மாடறுக்கும் இடத்தை பிரதேச சபை இழுத்து மூடியது: அதிக விலைக்கு இறைச்சி விற்கப்பட்டமைக்கு எதிராக தவிசாளர் அதிரடி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்