நிமல் சிறிபால டி சில்வா அமைச்சராக சத்தியப் பிரமாணம்

🕔 August 2, 2022

துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான கையூட்டல் குற்றச்சாட்டிலிருந்து – அது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி குழு அவரை நேற்று விடுவித்திருந்தது.

இதனையடுத்து அவர் இன்றைய தினம் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்