குரங்கம்மையினால் இந்தியாவில் முதல் மரணம் பதிவு

🕔 August 1, 2022

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணமடைந்துள்ளார். இது இந்தியாவில் இந்த நோயினால் ஏற்பட்ட முதல் மரணம் எனத் தெரியவருகிறது.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று வந்த கேரள மாநில இளைஞர் ஒருவரே இவ்வாறு இறந்துள்ளார்.

இந்த இளைஞர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், கடந்த 22ஆம் திகதி நாடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதை அடுத்து, அவர் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டமை தெரிய வந்தது.

Comments