அதிபர், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நாங்களும் பெற்றோல் வழங்கினோம்: அட்டாளைச்சேனை ஹஃபா நிலையம் தெரிவிப்பு

🕔 July 30, 2022

ட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திலுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமது எரிபொருள் நிலையத்திலும் முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் வழங்கப்பட்டதாக, அட்டாளைச்சேனை ஹஃபா எரிபொருள் நிலையத்தினர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்துள்ளனர்.

அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி அலுவலகம் – பிரதேச செயலாளர் ஊடாக, விடுத்த எழுத்து மூல வேண்டுகோளுக்கு அமைவாக 155 லீட்டர் பெற்றோல் – அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதாக ஹஃபா எரிபொருள் நிலையத்தினர் கூறுகின்றனர்.

மேலும், இதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணத்தினையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று எரிபொருள் நிரம்பும் நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திலுள்ள அதிபர்களுக்கு எரிபொருள் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தாஹிர் – தனது எரிபொருள் நிரப்பும் நிலையம் ஊடாக பெற்றோல் வழங்கி வைத்தார் என கிடைத்த தகவலின் அடிப்படையில் ‘புதிது’ செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட அதிபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், நிந்தவூர் தவிசாளர் தாஹிர் எரிபொருள் வழங்கி வைப்பு

Comments