நாடளுமன்ற சபை முதல்வராக சுசில் நியமனம்

🕔 July 27, 2022

நாடாளுமன்ற சபை முதல்வராக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய (27) நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் இதனை அறிவித்தார்.

சபை முதல்வராக செயற்பட்ட அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரதமராக பதவியேற்றுள்ளார். அதனால் சபை முதல்வர் பதவி வெற்றிடமானதையடுத்து, அதற்காக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஆளுந்தரப்பின் கொறடாவாக செயற்பட்டுவந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அப்பதவிக்கு மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments