ஸ்ரீலங்கா செக்ஸ் கட்சி, தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டதா: நிமல் புஞ்சிஹேவா பதில்

🕔 July 25, 2022
ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா

‘ஸ்ரீலங்கா செக்ஸ் கட்சி’ (Sri Lankan Sex Party) என்ற கட்சி இதுவரை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

‘ஸ்ரீலங்கா செக்ஸ் கட்சி’ என்று அழைக்கப்படும் ஒரு கட்சி. தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி குறித்து பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.

இந்த ஆண்டு எந்தக் கட்சியும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இந்த ஆண்டு அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட வேண்டியவற்றுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி மாதம் வரவழைக்கப்பட்டதாகவும், அந்தக் கட்சிகளின் நேர்காணல்கள் தற்போது நடத்தப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

தனக்குத் தெரிந்தவரை, மேற்கூறிய பெயருடன் எந்தக் கட்சியும் இல்லை என்றும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக ஒரு கட்சியை பதிவு செய்யும் போது, தேர்தல் ஆணைக்குழு பல விடயங்களில் கவனம் செலுத்துகிறது என்றும் புஞ்சிஹெவா குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள கட்சியின் பெயர், தேசிய சின்னங்கள் ஒரு கட்சியின் அடையாளங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனவா, கட்சியின் பெயர் அரசியலமைப்பிற்கு எதிரானதா, முதலியன கட்சி பதிவின் போது சரிபார்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஒரு குறிப்பிட்ட கட்சி பாலுணர்வை தவறான வழியில் சித்தரித்தால், அது ஒரு சிக்கலான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்