எரிபொருள் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டால் ‘ஜெனரேட்டர்’ பயன்படுத்த வேண்டும்: இல்லையென்றால் முறைப்பாடு செய்யலாம்

🕔 July 25, 2022

– முன்ஸிப் அஹமட் –

மின்சாரத் தடை ஏற்படும் போது – எரிபொருள் நிலையங்களில் கட்டாயமாக மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் மின்சாரத் தடை ஏற்படும் போது, அதிகமான எரிபொருள் நிலையங்களில் மின்பிறப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் தேவ பிரியவுடன் பேசியபோது; “மின்சாரத் தடை ஏற்படுமாயின், கட்டாயமாக மின்பிறப்பாக்கிகளை – எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பயன்படுத்த வேண்டும்” என கூறினார்.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசைகளில் பல நாட்களாகக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், மின்சார தடை ஏற்படும் போது – பல எரிபொருள் நிலையங்கள் ‘மின்சாரம் இல்லை’ என்கிற பதாகையினை காட்சிப்படுத்தி விட்டு மூடப்படுகின்றன. இதனால் வரிசைகளில் காத்திருக்கும் பொதுமக்கள் மேலும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, மின்சாரத் தடை ஏற்படும் போது எரிபொருள் நிலையங்களில் மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) பயன்படுத்தப்படவில்லை என்றால், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து – பிராந்திய காரியாலயங்களுக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும்.

முறைப்பாடு செய்வதற்கான பிராந்திய அலுவலகங்களின் தொலைபேசி இலங்கங்கள்

  1. West (Nugegoda) – 011 5664855
  2. Sabaragamuwa (Kegalle) – 035 5624900 / 035 5624901 / 035 5624902
  3. South (Galle) – 091 5625672 / 091 2234523
  4. Uva (Badulla) – 055 5677611 / 055 2231979
  5. North Central (Anuradhapura) – 025 2222374
  6. North (Jaffna) – 0215670300 / 021 2222033
  7. Central (Kandy) – 0812388674 / 081 5625154
  8. North West (Kurunegala) – 037 2222517
  9. East (Batticaloa) – 065 2224429 / 065 5670160

Comments

புதிது பேஸ்புக் பக்கம்