தலைப்புச் செய்திகள்

வன்முறையில் சேதமடைந்த பொதுஜன பெரமுன எம்.பிகளின் வீடுகளை மீள் நிர்மாணம் செய்ய ரணில் தீர்மானம்

வன்முறைச் சம்பவங்களினால் மே மாதம் 09ஆம் திகதி சொத்துக்களை இழந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளையும் மீளக் கட்டுவதற்கு, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க – நாடாளுமன்ற உறுப்பினர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு அவ்வப்பொழுது அவர்களுக்கு இதனை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீடுகளை அழித்தவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், தனது ஆட்சியில் நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதில் ஜனாதிபதி மேலும் அறிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி – நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட கிட்டத்தட்ட எண்பது அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.