தலைப்புச் செய்திகள்

போராட்டக்காரர்களின் கோரிக்கையை அடுத்து ரூபவாஹினி, ஐரிஎன் நிலையங்களுக்கு அதிக பாதுகாப்பு

கோட்டாபய ராஜபக்ஷவின் ராஜினாமாவை அறிவிக்கப்பட்ட பின்னர், நாளைய தினம் நாட்டுக்கு அறிக்கையொன்றை வழங்குவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரில் சில குழுக்கள், நேரடி ஒளிபரப்பு கோரியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் ஐடிஎன் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான ராணுவ மற்றும் விமானப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரச ஊடகங்களான ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி (ஐ.டி.என்) ஆகியவற்றின் நிர்வாகங்கள் போராட்டக் குழுக்களல் அணுகப்பட்டதாகவும், அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்பும் அறிக்கைகளை நாளை நேரலையில் ஒளிபரப்புமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இரு நிர்வாகங்களும் அவர்களது கோரிக்கைகளுக்கு மறுத்துவிட்டன.

இந்த நிலையில் இந்த இரண்டு ஊடக நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு நூற்றுக்கணக்கான படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.