வில்பத்து காடழிப்பின் பின்னணியில் பசில் ராஜபக்ஷ; பொது பல சேனா குற்றச்சாட்டு

🕔 January 6, 2016
Bodu bala sena - 9765கிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வில்பத்து காடு அழிக்கப்பட்டதாகவும், அதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இருந்ததாகவும் பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது குறித்து,  சுமார் 05 கடிதங்களை தாம் அனுப்பி வைத்தாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையிலுள்ள அடிப்படைவாத குழுக்கள் குறித்து தாம் 02 வருடங்களுக்கு முன்னர் தெரியப்படுத்தியதாகவும், அதன்போது தேவையற்ற குழப்பங்களை பொது பல சேனா ஏற்படுத்துவதாக சிலர் குற்றம் சுமத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்