
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வாரமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும்.
கடந்த வாரமும் 04ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்படுகிறது.



