தலைப்புச் செய்திகள்

மக்கள் எழுச்சி: நேற்றைய போராட்டத்தின் போது நடந்தவை என்ன?

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில் நடந்த முக்கிய பல விடயங்கள் நடந்துள்ளன.

  1. ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்
  2. ஜனாதிபதி செயலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.
  3. சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
  4. இந்தக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
  5. தான் பதவி விலகத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.
  6. பேராட்டக்காரர்கள் அலறி மாளிகையினுள்ளும் பிரவேசித்தனர்.
  7. அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கு சபாநாயகர் எழுத்து மூலம் அறிவித்தார்.
  8. அமைச்சர் பந்துல குணவர்த்தன தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகவும், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படப் போவதாகவும் அறிவித்தார்.
  9. அமைச்சர்களான ஹரீன் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயகார ஆகியோர் தமது அமைச்சர் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
  10. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சொந்த வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது.
  11. 13ஆம் திகதி பதவியிலிருந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் அறிவித்தார்.

நேற்றைய போராட்டங்களின் சுமார் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஊடகவியலாளர்களும் அடங்குவர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்களை தாக்கியமை குறிப்பிடத்தக்கது.