தலைப்புச் செய்திகள்

கோட்டா, ரணில் பதவி விலகுமாறு கோரி, பௌத்த பிக்குகள் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து பௌத்த பிக்குகள் கொழும்பு – கோட்டையில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று சைக்கிள் அணிவகுப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, சர்வ கட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த சைக்கிள் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

நுகேகொட மேம்பாலத்திற்கு அருகாமையில் இருந்து சைக்கிள் அணிவகுப்பை ஆரம்பித்து, கொழும்பில் உள்ள பொது நூலகத்துக்கு அருகில் இந்த சைக்கிள் போராட்டம் நிறைவடைந்தது. அதன் பின்னர் பொது ஒன்றுகூடல் நடைபெற்றது.

இவர்கள் நாளை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.