
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சிலர், வீதியை மறித்த குற்றச்சாட்டின் கீழ் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று காலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட குழுவினரை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் அந்த இடதுக்கு சென்றிருந்தனர்.
ஹிருணிகா குழுவினர் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செல்லும் சத்தாம் வீதிக்கு அருகில் பொதுமக்கள் ஒன்று கூடியிருந்த நிலையில், பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.



