தலைப்புச் செய்திகள்

லஞ்சம் கோரியதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து, அமைச்சர் நிமல் ராஜிநாமா

அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

ஜப்பானிய நிறுவனத்திடம் அமைச்சர் ஒருவர் லஞ்சம் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நேற்று நாடாமன்றில் கூறியிருந்தார்.

அமைச்சரவையில் உள்ள ஒருஅமைச்சர் – ஜப்பானில் உள்ள தைசீ என்ற நிறுவனத்திடம் லஞ்சம் கோரியதாக சஜித் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிமல் சிறிபால டி சில்வா; குறித்த அமைச்சர் யார் என சஜித் பிரேமதாஸ பெயர் குறிப்பிடாத போதும், சம்பந்தப்பட்ட விடயம் தனது அமைச்சுக்கு உட்பட்ட என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் லஞ்சம் பெற்றதாக பொதுமக்களிடையே ஏற்கனவே ஊகங்கள் இருப்பதால், தான் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபயா ராஜபக்ஷவுக்கு நிமல் சிறிபால டி சில்வா எழுதியுள்ள கடிதத்தில், இது குறித்து விரிவான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறு கோரியுள்ளார்.