
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர் பிரிவு உப தலைவர் ரெஹான் ஜெயவிக்ரம உள்ளிட்ட 09 பேரை இன்று (06) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோட்டேயிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைது இவர்கள் செய்யப்பட்டனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தொடர்பில் அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில், பெண்கள் மற்றும் ஆண்களைக் கொண்ட குழுவினருடன் ஹிருணிகா பிரேமச்சந்திர், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே நடைபாதையில் அமர்ந்திருந்தபோது ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தை பேஸ்புக் வழியாக நேரடி ஒளிபரப்புச் செய்த போது ரெஹான் ஜெயவிக்ரம கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்டனர்.



