சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதிக்கு எச்சரிக்கைக் கடிதம்

🕔 July 4, 2022

லங்கையின் பல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுடன் படைத்தரப்பினர் மோதிக்கொள்வதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் நிலையங்களில் – பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் புரிந்து கொள்வது அவசியம். அதேநேரம் பொலிஸாரும் ஆயுதப்படையினரும் மிகவும் கடினமான சூழ்நிலையில் செயற்படுகின்றனர்.

எனினும், பொதுமக்களுடன் வன்முறையை தவிர்த்து மிகவும் நிதானத்துடன் செயற்படுமாறு பொலிஸாருக்கும் படையினருக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்குவது அவசியமாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் ஜனாதிபதிக்கான தமது கடிதத்தில் கோரியுள்ளது.

அத்தகைய வன்முறைக்கு பொதுமக்களை உட்படுத்தும் தவறான அதிகாரிகளைக் கையாள்வதற்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் சம்மேளனம் கேட்டுள்ளது

பொலிஸாரால் முக்கியமாக நிர்வகிக்கப்பட வேண்டிய விடயங்களில், படையினரை  ஈடுபடுத்துவது பொருத்தமானதல்ல என்றும் சட்டத்தரணிகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையிவல் கடந்த வாரம் காலியில் மேற்கொள்ளப்பட்டதை போன்று,  அமைதியான போராட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கவோ அல்லது தடுக்கவோ ஆயுதப் படைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது

இல்லையெனில், எதிர்பாராத குழப்பநிலையையும் அமைதியின்மையையும் தடுக்கமுடியாது என்றும் சட்டத்தரணிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்