பெற்றோலுக்குப் பதிலாக, மோட்டார் சைக்கிள்களுக்கு மாற்று ‘எரிபொருள்’: இயந்திரங்கள் பழுதடையும் என எச்சரிக்கை

🕔 July 1, 2022

– அஹமட் –

நாட்டிலல் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பலரும் மாற்று வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.

தமது மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் இல்லாதவர்களில்  கணிசமானோர் – பெயின்ற் தின்னர் (Paint Thinner) உடன் மண்ணெண்ணெய் கலந்து, அதனை எரிபொருளாகப் பயன்படுத்தி பயன்படுத்தி வருகின்றார்கள்.

50க்கு 50 எனும் விகித்தில் பெயின்ற் தின்னர் (Paint Thinner) மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை கலந்து – தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தி வருவதாக நபரொருவர் தெரிவிக்கின்றார்.

உள்ளுர் வியாபார நிலையங்களில் ஒரு லீட்டர் பெயின்ற் தின்னர் (Paint Thinner) 980 ரூபாவுக்கு விற்பனையாகிறது. ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 87 ரூபாவுக்கு கிடைக்கிறது.

இதேவேளை, கறுப்புச் சந்தையில் ஒரு போத்தல் பெற்றோல் (750 மில்லி லிட்டர்) 1500 ரூபா வரையில் விற்பனையாவதாக அறிய முடிகிறது.

எரிபொருள் நிலையங்களில் ஒரு லீட்டர் பெற்றோலின் (92 ஒக்டேன்) விலை 470 ரூபாவாகும்.

பெயின்ற் தின்னர் (Paint Thinner) மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தும் போது, மோட்டார் சைக்கிள் இயந்திரத்தின் சில பாகங்கள் பழுதடையும் என, மோட்டார் சைக்கிள் திருத்துநர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.  

இதேவேளை, பெற்றோல் இல்லாமையினால் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களில் பெரும்பாலானோர், சைக்கிள் பாவனைக்கு மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments