“எனது மார்பகங்கள் குறித்து, நான் பெருமைப்படுகிறேன்”: முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஹிருணிகா

🕔 June 23, 2022

ன்னுடைய மார்பகங்கள் குறித்து நக்கலும் நையாண்டியும் செய்து, சமூக ஊடகங்களில் பதிவுகளை இடுகின்றவர்கள் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் உணர்வுபூர்வமான பதிவொன்றினை இட்டுள்ளார்.

‘எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் பேசி, மீம்ஸ் செய்து, என் மார்பைப் பற்றிச் சிரித்து முடிக்கும் போது, வரிசையில் நின்று கொண்டிருந்த இன்னொரு பொதுமகன் இறந்துவிட்டார்’ அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘நான் என் மார்பகங்களைப் குறித்து பெருமைப்படுகிறேன். நான் மூன்று அழகான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, என் முழு உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

எனது வெளிப்பட்ட மார்பகங்களை கேலி செய்பவர்கள் (பொலிஸாருடனான மோதலின் போது) குழந்தைகளாக இருந்தபோது அவர்களின் தாய்மார்களின் முலைக்காம்புகளை உறுஞ்சியிருப்பார்கள் என – நான் உறுதியாக நம்புகிறேன்.

எப்படியும் நீங்கள் பேசி, மீம்ஸ் செய்து, என் மார்பைப் பற்றிச் சிரித்து முடித்தபோது, வரிசையில் நின்று கொண்டிருந்த இன்னொரு பொதுமகன் இறந்துவிட்டார். இது உங்களுக்குத் தெரியும்“ என, அவர் பதிவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (22) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக பெண்கள் அணியுடன் திரண்ட முன்னாள் நாடாளுமுன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, அங்கு போடப்பட்டிருந்த பொலிஸாரின் தடையின் மீது ஏறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது எடுக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டபோது, ஹிருணிகாவின் மார்பகங்கள் குறித்து சிலர் சமூக ஊடகங்களில் கேலி செய்து பதிவுகளை இட்டிருந்தனர்.

இதற்கு பதிலடி வழங்கும் வகையிலேயே, இந்தப் பதிவை ஹிருணிகா எழுதியுள்ளார்.

Comments