நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக சத்தியப்பிரமாணம்

🕔 June 22, 2022

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தகர் தம்மிக பெரேரா இன்று (22) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது தம்மிக்க பெரேரா சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக பெரேராவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்டது.

தேசியப்பட்டியல் உறுப்பிர் பசில் ராஜபக்ஷவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு, தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இருந்தபோதிலும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமைகள் மனுக்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே அவற்றினை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

இதேவேளை, தம்மிக பெரேரா – அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அவருக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்