சர்ச்சையில் சிக்கிய மின்சார சபைத் தலைவர் பெர்டினாண்டோ, பதவியிலிருந்து ராஜிநாமா

🕔 June 13, 2022

லங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெர்டினாண்டோவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் உப தலைவர் நலிந்த இளங்ககோன் பதவியேற்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மன்னார் காற்றலை மின் திட்டத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்குமாறு தன்னிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதாகவும், இந்தியப் பிரதமர் குறித்த திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாாவுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் எம்.எம்.சி. பெர்டினாண்டோ – கோப் குழு முன்பாக தெரிவித்திருந்தார். இது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, மின்சார சபைத் தலைவரிடம் தான் அவ்வாறு கூறவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர், கோப் குழு முன்பாக தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக, மின்சார சபைத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டார்.

இந்தப் பின்னணியிலேயே, அவர் தற்போது தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: மன்னார் காற்றலை மின் திட்டம்; ஜனாதிபதியை கோப் குழுவில் போட்டுக் கொடுத்த CEB தலைவர்: பின்னர் பல்டியடிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்