டொக்டர் ஷாபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலத்துக்குரிய சம்பளம் கிடைத்தது: அதனை அன்பளிப்புச் செய்யவுள்ளதாக தெரிவிப்பு

🕔 June 13, 2022
டொக்டர் ஷாபிக்கு வழங்கப்பட்ட காசோலை

– அஹமட் –

குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றும் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலத்துக்குரிய சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் கிடைக்கப் பெற்றமையை அடுத்து, அதனை அன்பளிப்புச் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

‘புதிது’ செய்தித்தளம் அவரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் இதனைக் கூறினார்.

சுமார் 04 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டொக்டர் ஷாபி, கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டமையினை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் றிட் மனுவொன்றை தாக்கல் செய்தமைக்கு அமைய, அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த காலத்துக்குரிய சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சு இதனை வழங்கியுள்ளது.

இதற்கமைய 28 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமான தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக டொக்டர் ஷாபி தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: டொக்டர் ஷாபிக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்