தம்மிக்க பெரேராவின் வீடு முன்பாக ஆர்ப்பாட்டம்

🕔 June 12, 2022

பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக இன்று (12) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கமவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள், தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு எதிரே பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதியான முறையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பசில் ராஜபக்ஷ பதவி விலகியமையை அடுத்து, அந்த வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவின் பெயர் கடந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்